துயர் பகிர்வு: திருமதி சிவசுந்தரி தனஞ்செயன்

சிவசுந்தரி தனஞ்செயன்

பிறப்பு: ஜூன் 12, 1934           உதிர்வு: ஜூன் 23, 2024

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அங்கத்தவருமான ஆதித்தன் தனஞ்செயனின் அன்புத் தாயார் சிவசுந்தரி தனஞ்செயன் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 23, 2024 அன்று மிசிசாகா கனடாவில் இயற்கையெய்தினார்.

யாழ்ப்பாணம் கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும் நீராவியடி (யாழ்ப்பாணம்), மிசிசாகா (கனடா) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், காலஞ்சென்ற தனஞ்செயனின் (ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்) அன்பு மனைவியும், காலஞ்சென்ற திரு.திருமதி வி.என். கந்தையா (கொழும்பு பிரபல வர்த்தகர்) தம்பதியினரின் அன்புமகளும் காலஞ்சென்ற சரவணமுத்து (ஓய்வுபெற்ற தபாலதிபர்) தம்பதியினரின் அன்பு மருமகளும், ஆதித்தன், மங்களா, அனு, கல்பனா ஆகியோரின் அன்புத் தாயாரும், மாதுமை, நந்தகுமார், புனிதநாதன், நிமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும் அபிரா, சாய்ரா, சினேகன், ஹரி, மகி, மிது, மயூரா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் விமலசுந்தரம், காலஞ்சென்ற ஶ்ரீகாந்தா மற்றும் ஶ்ரீபதி, விவேகசுந்தரா ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற சாம்பசிவம், கருணாதேவி, மகேஸ்வரி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், நல்லநாதன், மற்றும் சிவலோகநாதன், காலஞ்சென்ற செந்தில்நாதன், மங்கையற்கரசி மற்றும் ராஜேஸ், வர்ணலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடன் ஞாயிற்றுக்கிழமைம் ஜூன் 30, 2024 காலை 8:30 முதல் 10:30 வரை 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 என்ற முகவரியில் அமைந்துள்ள St John’s Dixie Cemetery & Crematorium இல் பார்வைக்கு வைக்கப்பட்டு காலை 10:30 முதல் மதியம் 12:00 வரை அதே இடத்தில் இறுதிச் சடங்கள் செய்யப்பட்டு பின்னர் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் இழப்பால் வருந்தும் உற்றார், உறவினர், நண்பர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் துயரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவும் பங்கேற்கிறது.

தொடர்புகளுக்கு:
ஆதித்தன் (மகன்) – +1 416 315 3464

https://ripbook.com/sivasundari-thananchayan-667c62dbc58aa/notice/obituary-667c6370421ae