துயர் பகிர்வு: பிரம்மஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்

பிரம்மஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்

தோற்றம்: 29 SEP 1979                           மறைவு: 26 APR 2024

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 98 ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த பழைய மாணவரும் யாழ்ப்பாணம் கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும் பிறம்ரன் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரைக் குருக்கள் அரிகரக் குருக்கள் ஏப்ரல் 26, 2024 அன்று இயற்கையெய்தினார்.
அன்னார் முத்துசாமி ஐயர் ஐயாத்துரைக் குருக்கள் – சகுந்தலாதேவி ஆகியீரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுந்தரசர்மா சுந்தரதாசக் குருக்கள் மற்றும் கல்யாணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் ஆருயிர்க் கணவரும், அபிஷா, அகஸ்திய சர்மா, அபூர்வா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அனந்த சர்மா, காலஞ்சென்ற கோபி சர்மா (பழைய மாணவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, 96 பிரிவு), ஆதவன் சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, ON ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 29-04-2024 திங்கட்கிழமை காலை 11:30 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4:00 மணியளவில் 1591 Elgin Mills East, Richmond Hill, ON இல் அமைந்துள்ள Elgin Mills Cemetary இல் தகனம் செய்யப்படும்.

https://ripbook.com/iyathurai-iyer-arikarakurukkal-662b5abd0838d/notice/obituary-662b5b82ce427