துயர் பகிர்வு: தவனேஸ்வரி ஶ்ரீநிவாசன்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் செயலாளருமான சுதர்சன் ஶ்ரீநிவாசனின் (அருண்மொழிவர்மன்) அன்புத் தாயார் தவனேஸ்வரி ஶ்ரீநிவாசன் அவர்கள் புதன்கிழமை, டிசம்பர் 13, 2023 அன்று கொழும்பில் இயற்கையெய்தினார்.

பிறப்பு: 1 Aug 1953 உதிர்வு: 13 Dec 2023

சங்கானையைப் பிறப்பிடமாகவும், நவாலி, சுதுமலை ஆகிய இடங்களில் வசித்தவரும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவருமான இவர் காலஞ்சென்ற ஶ்ரீநிவாசன் (ஓய்வுபெற்ற முகாமையாளர், இலங்கை வங்கி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவராஜா – நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – ஶ்ரீமதியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், சுதர்சன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர், கனடா), பிரஷாந்த் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர், அமெரிக்கா), பிரதீபன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்), தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும், மதனிகா (கனடா), காயத்ரி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும், அதீதன் (கனடா), எயினி (கனடா), மயூரா (அமெரிக்கா), நவிரா (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 17, 2023 அன்று கொழும்புவில் இடம்பெறும். அன்னாரின் இழப்பால் வருந்தும் உற்றார், உறவினர், நண்பர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் துயரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவும் பங்கேற்கிறது.