துயர் பகிர்வு: திரு ஏகாம்பரநாதன் பரஞ்சோதி

திரு ஏகாம்பரநாதன் பரஞ்சோதி
பண்டிதர், சைவப்புலவர்

தோற்றம்: 21 AUG 1923 மறைவு: 17 MAR 2023

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரநாதன் பரஞ்சோதி அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலை இயற்கை எய்தினார்.

அன்னார், மீசாலையச் சேர்ந்த ஏகாம்பரநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான உமையம்மை, பராசக்தி, யோகாம்பிகை, சுயம்சோதி ஞானாம்பிகை, மற்றும் சாம்பசிவமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானாம்பிகை(கௌரி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தி, ரஞ்சனி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1976 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பிரிவைச் சேர்ந்த பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் முன்னாள் தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் தமிழ் மாணவர் உதவித்திட்ட உபகுழு (ஊருணி செயற்திட்டம்) முன்னாள் உறுப்பினருமான தயாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சறோஜா, தங்கராணி ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,

அருணாசலம், ஸ்ரீகதிர்காமநாதன், மைதிலி, ரவீந்திரன், கிருபானந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்திகா- கிருஷாந்த் , காயத்திரி- ரஜீவன், பார்த்திபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நயனி அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலுக்கு 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் அவரது வீட்டில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதன்பின்னர் அவரது பூதவுடல் அவரது விருப்பப்படி குடும்பத்தினரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்குக் கையளிக்கப்பட்டது என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

தொடர்புகளுக்கு

ஆனந்தி – மகள்

ரஞ்சனி – மகள்

ரஞ்சனி – மகள்

தயாநிதி – மகன்

தயாநிதி – மகன்

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://ripbook.com/ehampranathan-paramsothi-64149d0b20007)