துயர் பகிர்வு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர், உப அதிபர் திரு சின்னராசா கிருஸ்ணகுமார்

திரு சின்னராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர், உப அதிபர்

தோற்றம்: 12 MAY 1947                                                            மறைவு: 22 MAR 2023

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்உப அதிபர் ஆகிய பதவிகளில் 1977 – 2006 வரையான காலப்பகுதியில் பணியாற்றிய சின்னராசா கிருஸ்ணகுமார் அவர்கள் புதன்கிழமைமார்ச் 22, 2023 அன்று இயற்கையெய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னராசா – சௌந்தரபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்இராஜகோபால் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்சரோஜாவின் அன்புக் கணவரும்தர்ஷினிநிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்யசோதரன்சாரண்யா ஆகியோரின் அன்பு மாமனும்காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் சாந்தகுமார்தனலெட்சுமிஇரட்ணகுமார்உதயகுமார்மகாலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் திருமதி இராசநாயகிசுசிலாகிருஸ்ணவேணி (வேணி), ஜெயரத்னராஜாவிஜயாபேரின்பம்ஆகியோரின் மைத்துனரும் றொசாந்நிதுரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமைமார்ச் 26 அன்று பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக வண்ணை கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.  இவ்வறிவித்தலை உற்றார்உறவினர்கள்நண்பர்கள் அனைவரும் ஏற்றும்படி குடும்பத்தினர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.