நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களால் சங்கீத டீச்சர் என்று அன்பாக அழைக்கப்பட்ட கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை செல்வி.தங்கலட்சுமி செல்லத்துரை அவர்கள் இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் கல்லூரிச் சமூகத்தினருக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிச் சங்கம் கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.