திரு சின்னராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர், உப அதிபர்
தோற்றம்: 12 MAY 1947 மறைவு: 22 MAR 2023
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியர், உப அதிபர் ஆகிய பதவிகளில் 1977 – 2006 வரையான காலப்பகுதியில் பணியாற்றிய சின்னராசா கிருஸ்ணகுமார் அவர்கள் புதன்கிழமை, மார்ச் 22, 2023 அன்று இயற்கையெய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னராசா – சௌந்தரபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், இராஜகோபால் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும், சரோஜாவின் அன்புக் கணவரும், தர்ஷினி, நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், யசோதரன், சாரண்யா ஆகியோரின் அன்பு மாமனும், காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் சாந்தகுமார், தனலெட்சுமி, இரட்ணகுமார், உதயகுமார், மகாலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் திருமதி இராசநாயகி, சுசிலா, கிருஸ்ணவேணி (வேணி), ஜெயரத்னராஜா, விஜயா, பேரின்பம், ஆகியோரின் மைத்துனரும் றொசாந், நிதுரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26 அன்று பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக வண்ணை கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றும்படி குடும்பத்தினர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.