TSA – 2020 Subcommittee

ஊருணி தமிழ்மாணவர் உதவித்திட்டத்தின் 2020 வருடாந்த பொதுக்கூட்டம்

உலகளாவிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு செயற்திட்டங்கள் செயலிழந்திருக்கின்ற சூழலிலும் வினைத்திறனுடன் இயங்கிவருகின்ற ஊருணி – தமிழ் மாணவர்கள் உதவித்திட்டம் தொழினுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்டு கல்வி வளர்ச்சிக்குக்கான புதிய தேவைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு செயற்பட்டு வருகின்றது.  மேலும் தொழினுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்டு இவ்வாண்டுப் பொதுக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் இ. செந்தில்மாறன் அவர்களை அழைத்துக்கொண்டதுடன் இலங்கையில் இருக்கின்ற நால்வரை சிறப்புப் பேச்சாளர்களாகவும் இணைத்து Zoom செயலிமூலம் ஜூலை 5 ஆம் திகதி காலை 11 மணி முதல் 1:30 வரை ஒருங்கிணைத்திருந்தது.  147 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த இணையவழி நிகழ்வு காத்திரமான கருத்துரையாடல்களுடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடனும் நடந்தேறியது குறித்து தமிழ் மாணவர் உதவித்திட்டம் பெருமையடைகின்றது. 

சிறப்பு விருந்தினர் உரையும் சிறப்புப் பேச்சாளர்கள் உரையும்

அதிபர் இ. செந்தில்மாறன் உரை
Dr. T. சத்தியமூர்த்தி (பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை) உரை
திரு. ஐ. கைலாசபதி (விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம்) உரை
திரு எம் செல்வின் உரை
Dr. பிரபு நடராஜா (கல்வி மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்) உரை