மரண அறிவித்தல் – திரு ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம் (பொபி)

திரு ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம் (பொபி)
பிரபல தடகள வீரர் மற்றும் இளைப்பாறிய ஆசிரியர் யாழ் இந்துக் கல்லூரி

அன்னை மடியில் (24 JAN 1938) இறைவன் அடியில் (29 JUL 2021)

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், பிரபல தடகள வீரர் மற்றும் இளைப்பாறிய ஆசிரியர் (யாழ் இந்துக் கல்லூரி) திரு ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழினி(சூட்டி), அன்புச்செல்வன்(செல்வன்), அன்புச்செல்வி(சிந்தா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, காவேரியம்மா மற்றும் சிறீனிவாசன்(கொழும்பு), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா(கொழும்பு), காலஞ்சென்ற மாதவாம்பிகை, ஸ்ரீஜெயராஜா(ஐக்கிய அமெரிக்கா), சாரதாம்பிகை(கனடா), காலஞ்சென்ற யசோதராம்பிகை, ஸ்ரீகணேசராஜா(யாழ்ப்பாணம்), வடிவாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகேந்திரன், Erika, பிரசாத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Sandro, சீதா, அரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

தொடர்புகளுக்கு

 அன்புச்செல்வன்(செல்வன்) – மகன்
Mobile :  +4915120507042

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://ripbook.com)

Posted Under