
பழையமாணவர் யாழ் இந்துக் கல்லூரி (1941-1945)
பத்திரிகையாளர்
அன்னை மடியில் (03 JUN 1930) இறைவன் அடியில் (24 MAY 2020)
யாழ். மானிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட இராஜா இராஜேந்திரராஜா அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மானிப்பாய் தெற்கைச் சேர்ந்த டபிள்யு. எம். இராஜா தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1982 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பிரிவைச் சேர்ந்த பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் முன்னாள் செயற்குழு உறுப்பினருமான ஆர். ஆர். இராஜ்குமார்(அதிபர் – J.R.B.Group, கனடா), இராஜலட்சுமி(கனடா), இராஜநாதன்(பிரித்தானியா), இராஜமனோகரி(ரஜனி, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி, கிருபானந்தம், சாந்தினி, சஞ்சித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சேனாதிராஜா, தேவராஜா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ரட்ணராஜா, ராஜேஸ்வரி சிவப்பிரகாசம், மகேந்திரராஜா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பூலோகலட்சுமி மற்றும் P.K. மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாய்பிருந்தன், யெனார்த்தனன், கிரிஜா கீதன், ரஜீவன், சிரான், யானுனி, சபிலன், மிதுலன், திவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை யாழ்ப்பாணம் நல்லூர் – 338 பருத்தித்துறை வீதியிலுள்ள சங்கிலியன் தோப்பு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
தொடர்புகளுக்கு:
ஆர்.ஆர். இராஜ்குமார் – மகன் |
Mobile : +16472896164 |
இராஜலட்சுமி – மகள் |
Mobile : +16477806832 |
இராஜநாதன் – மகன் |
Mobile : +447877159928 |
இராஜமனோகரி – மகள் |
Mobile : +16476854551 |
கஜன் |
Mobile : +94775581490 |
தேவரஞ்சன்(Scout) |
Mobile : +94775581626 |
நந்தன் |
Mobile : +94777570247 |
மூலம்: நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/16617622/notice/108654)