துயர் பகிர்வு:திருமதி பத்மாசனி சாரங்கபாணி (பிறந்த இடம் – Kuala Lumpur,Malaysia, வாழ்ந்த இடங்கள் – நெல்லியடி, Sri Lanka;கொழும்பு, Sri Lanka ; Mississauga, Canada)

திருமதி பத்மாசனி  சாரங்கபாணி

தோற்றம் : 08 OCT 1934                                                                              மறைவு : 01 MAR 2023

இந்துவின் மூத்த புதல்வரும் , யாழ் இந்து கல்லூரி கனடா சங்கத்தின் (22/23) தலைவருமான திரு குகதாசன் (குகன்) -(JHC 1980 Batch) அவர்களின் தாயார் திருமதி பத்மாசனி  சாரங்கபாணி இன்று (March 01,2023) கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் , குடும்பத்தாரிடம் அனைவரின் சார்பாக துயர் பகிர்ந்து கொள்கிறோம்.

மலேசியா Kuala Lumpurஐ பிறப்பிடமாகவும், யாழ்.நெல்லியடி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகக் கொண்ட பத்மாசனி சாரங்கபாணி 01-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருந்தட்டி நெல்லியடியைச் சேர்ந்த வடிவேலு தெய்வாணை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இணுவிலைச் சேர்ந்த செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா சாரங்கபாணி(இணுவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

குகதாசன்(கனடா), காலஞ்சென்ற தாரிணி சுதாகர், ரமணி பாக்கியராஜா(கனடா), குகபாலன்(அமெரிக்கா), குகநேசன்(அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷியந்தி, சுதாகர், பாக்கியராஜா, தாரணி, சிவாஜினி ஆகியோரின் அருமை மாமியாரும்,

பிரண்யா, மாதுளன், உத்தமி, கீர்த்தனா, மயூரா, விஷால், ஜெயனி, சாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, சிவனேசன், கணேசன், உமாதேவி, அம்பிகாதேவி, ராமச்சந்திரன் மற்றும் ரதிதேவி ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

யாழ் இந்துக்கல்லூரி கனடா சங்கத்தின் இணையதளம் ஊடாகவும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction

கிரியைGet Direction

தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

 குகதாசன் (குகன்) – மகன்

 ரமணி  – மகள்

 குகபாலன்(திரு) – மகன்

 குகநேசன் (நரேன்) – மகன்

தகவல்: குடும்பத்தினர்

Posted Under