துயர் பகிர்வு: திருமதி சுப்பிரமணியம் பராசக்தி (யாழ். மானிப்பாய் சுதுமலை கிழக்கு, கனடா Toronto)

திருமதி சுப்பிரமணியம் பராசக்தி

தோற்றம் : 14 FEB 1929                                                                                மறைவு : 01 JAN 2023

இந்துவின் மூத்த புதல்வர்கள் குகதாஸ்(JHC 1981 Batch), விமல்தாஸ் (JHC 1982 Batch) அவர்களின் தாயார் திருமதி சுப்பிரமணியம் பராசக்தி இன்று (Jan 01,2023) கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் , குடும்பத்தாரிடம் அனைவரின் சார்பாக துயர் பகிர்ந்து கொள்கிறோம்.

யாழ். மானிப்பாய் சுதுமலை கிழக்கு மலைவேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பராசக்தி அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்(உடுப்பிட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பரம்சோதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), பத்மநாதன்(சிறீ, கணக்காளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லீலாவதி, திவ்யரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

தபோநிதி(லண்டன்), கலாநிதி(கனடா), முருகதாஸ்(தாசன்- லண்டன்), குகதாஸ்(குகன- கனடா), விமலதாஸ்(விமலன்- ஐக்கிய அமெரிக்கா), சுந்தரதாஸ்(சுதன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருண்குமார், விசாகன், வாசுகி, சுகுணா, சிவசகி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜனனி, கஜானன், சிந்தூஜா, வைகுந்தன், தரன், பிரியங்கா, ஆகாஷ், வரண்யா, கோபிகா, தீபிகா, பிரவீன், நவீன், அஷ்வீன், கோகுலன், அபிராமி, கோபிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

உமா, இந்திரா, மைரா, இஷானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction

பார்வைக்குGet Direction

கிரியைGet Direction

தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

 தபோநிதி – மகள்

 கலாநிதி – மகள்

 முருகதாஸ்(தாசன்) – மகன்

 குகதாஸ்(குகன்) – மகன்

 விமலதாஸ்(விமலன்) – மகன்

 சுந்தரதாஸ்(சுதன்) – மகன்

தகவல்: குடும்பத்தினர்

Posted Under