துயர் பகிர்வு: திருமதி பவளவல்லி நவரத்தினம் (வேலணை மேற்கு,ஆவரங்கால், யாழ்ப்பாணம், கொழும்பு- ஸ்காபரோ,கனடா)

திருமதி பவளவல்லி நவரத்தினம்

தோற்றம் : 20.12.1932                                                                                மறைவு : 22.09.2022

இந்துவின் மூத்த புதல்வர்அமரர் கணபதிப்பிள்ளை நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் விநாயகலிங்கம் (JHC 1988 Batch), பஞ்சலிங்கம் ( யாழ் இந்து கனடா நிர்வாக குழு உறுப்பினர் , (JHC 1990 Batch) அவர்களின் தாயார் திருமதி பவளவல்லி நவரத்தினம் இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

வேலணை மேற்குபிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்போது கனடா ஸ்காபரோவில் கடந்த 27 வருடங்களாக வாழ்ந்தவருமான திருமதி பவளவல்லி நவரத்தினம் அவர்கள் 22ம் திகதி புரட்டாதி திங்கள் (22.09.2021) அன்று இறைபதம் அடைந்தார்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் , குடும்பத்தாரிடம் அனைவரின் சார்பாக துயர் பகிர்ந்து கொள்கிறோம்.

யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் கோயிலடி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பவளவல்லி நவரத்தினம் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணி, விநாயகலிங்கம்(ராசன்), பஞ்சலிங்கம்(மாதவன்), ராதை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகலிங்கம் மற்றும் திருஞானசம்பந்தர், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகாந்தராஜா(சசி), சிவரஜனி, சசிகலா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, சிவபாக்கியம், மகேஸ்வரி மற்றும் சோமசுந்தரம் செட்டியார், காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் சிதம்பரநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் நவரத்தினராஜா, சரோஜினிதேவி, நவரத்தினராணி, யோகேஸ்வரி, நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகிலன், அனுஷா, ஆரணி, ஆதவன், ஆதிரை, மாறன், விதுரன், ஆரபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction

பார்வைக்குGet Direction

கிரியைGet Direction

தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

 விநாயகலிங்கம் (JHC 1988 Batch)- மகன்

பஞ்சலிங்கம்(JHC 1990 Batch)மகன்

 ரமணி – மகள்

 சசி – மருமகன்

 ராதை – மகள்

Posted Under