துயர் பகிர்வு: எமது அன்னையின் மூத்த புதல்வரும் , யாழ் இந்து பழைய மாணவர் நடராஜனின் (கனடா JHC1990 ) அன்புத் தந்தையுமான திரு நாகலிங்கம் சுந்தரராஜன் அவர்கள் ஞாயிறன்று (31/07/2022) காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம் , குடும்பத்தாரிடம் அனைவரின் சார்பாக துயர் பகிர்ந்து கொள்கிறோம்.

மலேசியா கோலப்பிலாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சம்பந்தர்கண்டியைச் சேர்ந்தவருமான நாகலிங்கம் சுந்தரராஜன் ஞாயிறன்று (31/07/2022)   காரைநகரில் காலமானார். அன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவரும்,றோயல் விமானப்படை, றோயல் இலங்கை விமானப்படை, இலங்கை விமானப்படை, றோயல் ஓமான் பொலிஸ் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தரும், மாலைதீவு Full Moon Resort இன் முன்னாள் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தரும், காலஞ்சென்றவர்களான சம்பந்தர்கண்டி நாகலிங்கம் – அமிர்தரட்ணம் தம்பதியின் மகனும் , விஜயதேவியின் (ஜெயம்)அன்புக் கணவரும், மஹாராஜா நிறுவனத்தின் முன்னாள் IT நிர்வாகி நடராஜனின்  (கனடா) அன்புத் தந்தையும், கலைச்செல்வியின் (சூட்டி) பாசமிகு மாமனாரும், மதுரா, மாதேஸ், மகேஸ் ஆகியோரின் பெயரனும், திருமதி பொன்னம்பலம் ராஜராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற குமாரசாமி ( மலேசியா), காலஞ்சென்ற சந்திரலிங்கம் (ஓமந்தை), குஞ்சிதபாதம் (கனடா), பாலகிருஷ்ணன் (காரைநகர்), காலஞ்சென்ற ஜெயக்குமார் ஜேக்கப் விஜயலக்‌ஷுமி ஆகியோரின் சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் செவ்வாய்க் கிழமை 02/08/2022 காலை 8 மணியளவில், காரைநகர் சம்பந்தர்கண்டியிலுள்ள அன்னாரின் வாசஸ்தலத்தில் நடைபெற்று, ஈமைக் கிரியைகள் சாம்பலோடை இந்துமயானத்தில் செவ்வாய்  முற்பகல் 10.30 அளவில் நடைபெறுகிறது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புகட்கு: நடராஜன் (மகன் Canada) +1 (437) 221-9679 கலைச்செல்வி (சூட்டி – மருமகள்) 0094 770798146பாலகிருஷ்ணன் ( சகோதரன்) 0094 740710123குஞ்சிதபாதம் ( அப்பு – சகோதரன்) +1 (905) 201 – 0305

தகவல்:  குடும்பத்தினர்.

Posted Under