துயர் பகிர்வு:திரு மகேந்திரராஜா காா்த்திகேசு (யாழ்ப்பாணம்-பிறந்த இடம்,கொழும்பு, திருகோணமலை,மார்க்கம் கனடா )

திரு மகேந்திரராஜா காா்த்திகேசுஓய்வுபெற்ற High Court Registrar- Sri Lanka

கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும் பலாலி வீதியை வதிவிடமாகவும் கனடா மார்க்கத்தில் வாழ்ந்தவரும் யாழ் இந்து கல்லூரியின் சிறந்த விளையாடு வீரரும் , உதைபந்தாட்ட அணி தலைவரும் மூத்த பழைய மாணவருமாகிய திரு.கார்த்திகேசு மகேந்திரராஜா (முன்னாள் யாழ்/கொழும்பு/திருகோணமலை/ மடடக்களப்பு நீதிமன்ற பதிவாளர்) அவர்கள் செப்டம்பர் 4ம் திகதி கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர்கள் ரவீந்திரன் (JHC1980), சுரேந்திரா(JHC1985) ஆகியோரின் அன்பு அப்பா ஆவார். திரு மகேந்திரராஜா காா்த்திகேசு அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் , குடும்பத்தாரிடம் அனைவரின் சார்பாக துயர் பகிர்ந்து கொள்கிறோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காா்த்திகேசு தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

புவனேந்திரராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,

இரவீந்திரன், சுரேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதந்திரா, ஜெயகாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலாம்பிகை- புவனேந்திரராஜா, கமலாதேவி- திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மோகனா- சா்வானந்தன், ரோகினி- விக்னேஸ்வரன், வாசுகி- அருள்ராஜா, சத்யநாராயணன்- ஞானசுபாஷினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஹரிணி, ஹரன், ஹரேந்திரா, ஹா்ஷினி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை

தகனம்

தொடர்புகளுக்கு

 இரவீந்திரன் – மகன்

 சுரேந்திரா – மகன்

தகவல்: நன்றி இரவீந்திரன் – மகன்

Posted Under