திருமதி யோகாம்பிகை துளசிகாமணி ( யாழ் இந்துவின் மைந்தர்கள் மணிசேகரன், யோகசேகரன் சகோதர்களின் அன்னை )
பிறப்பு : 17 யூன் 1943 — இறப்பு : 24 மார்ச் 2018
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை துளசிகாமணி அவர்கள் 24-03-2018 சனிக்கிழமை அன்று கனடா Brampton இல் சாயிபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான C.S. கந்தையா லஷ்மிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும், துளசிகாமணி(சாயிபிரியன்) அவர்களின் அன்பு மனைவியும்,மணிசேகரன், யோகசேகரன், செல்வசேகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சிவயோகநாதன், இந்திராணி, சிவகுமாரன், யோகேஸ்வரி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயராணி, கனகமலர், மீனா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற நடனசிகாமணி, உதுமசிகாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சாயிரமணா(சத்யா), சாயிரமணி(சாயி), சாயிரம்யா, சாயிபிரியா, சாயிகரன், சாயிபிரேமி, சாயிசந்தோஷ், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|
Source: நன்றி லங்காசிறி இணையதளம் (http://www.kallarai.com/ta/obituary-20180325217805.html?ref=ls_d_obituary)