மரண அறிவித்தல் – திருமதி பாக்கியாம்பாள் சிவஞானம்

திருமதி பாக்கியாம்பாள் சிவஞானம்
தாயார் – முன்னாள் தலைவர் மோகன் சுந்தரமோகன் (யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா)
சிட்னி – அவுஸ்திரேலியா

அன்னை மடியில் (17 OCT 1928) இறைவன் அடியில் (13 SEP 2020)

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியாம்பாள் சிவஞானம் அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Sydney அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா சிவஞானம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவராம்(Contractor – IBM), மோகன் சுந்தரமோகன்(RBC Royal Bank, முன்னாள் தலைவர்யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கீதாஞ்சலி, ஷகிலா ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வரலக்‌ஷ்மி, அம்பிகாதேவி மற்றும் கமலராணி, சரஸ்வதி, ராஜாராம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ராஜரெட்ணம், ஜெயரட்ணம் மற்றும் நாகலிங்கம், ஸ்ரீரங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஸ்ரீமதி, செல்வரட்ணம், தேசோமயம், காந்திமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், செல்வநாச்சி, ராஜலக்‌ஷ்மி, ராஜகோபால் ஆகியோரின் அருமை மைத்துனியும்,

ஐஸ்வர்யா- சஜீவ், மோகனா- நிரோஷன், கஸ்தூரி, ஹரிகிஷான்- இஷானா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

மாயன், மிலானா ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/19790771/notice/111458)

Posted Under