மரண அறிவித்தல் – திரு கிருபாகரன் ஈஸ்வரபாதம்

திரு கிருபாகரன் ஈஸ்வரபாதம்

அன்னை மடியில் (17 FEB 1965) இறைவன் அடியில் (25 APR 2020)

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1983 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பிரிவைச் சேர்ந்த பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் அங்கத்தவரும், அதன் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்தவருமான கிருபாகரன் ஈஸ்வரபாதம் (கிருபா) அவர்கள் ரொரன்றோ, கனடாவில் ஏப்ரல் 25, 2020 சனிக்கிழமை அன்று இயற்கையெய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஈஸ்வரபாதம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், தனலக்ஷ்மி(ரதி), காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நித்தியானந்தன், காலஞ்சென்ற தியாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், லக்க்ஷி, கஜந், துவாரகன், சுஜானி ஆகியோரின் அன்பு மாமாவும், ரிஷி அவர்களின் அன்புச் சித்தப்பாவும், சக்தி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் வியாழக்கிழமை ஏப்ரல் 30, 2020 அன்று காலை 7:30 – 9:00 மணிவரை நடைபெறும். (இறுதி அஞ்சலி நேரலை)

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

மூலம்:  நன்றி லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/23222103/notice/108097)

Posted Under