மரண அறிவித்தல் – கலாநிதி ஞானேஸ்வரன் ஐயாத்துரை

கலாநிதி ஞானேஸ்வரன் ஐயாத்துரை
(மனோத்தத்துவ நிபுணர்)
பழையமாணவர் யாழ் இந்துக் கல்லூரி

அன்னை மடியில் (16 NOV 1948) இறைவன் அடியில் (10 SEP 2020)

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட Dr. ஞானேஸ்வரன் ஐயாத்துரை அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு ஐயாத்துரை(பிரபல வழக்கறிஞர்) முத்தம்மா(முத்து) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நாகலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி ஞானேஸ்வரன்(மிருக வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. நிரஜா, Dr. செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன்(வழக்கறிஞர், நகர பிதா- வவுனியா), யோகிஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜானகி மனோகரன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), ராமேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சாரதா சிவகுமார்(அவுஸ்திரேலியா), Dr. றஞ்சினி கிருஷ்ணானந்தன்(அவுஸ்திரேலியா),  விக்னேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

Dr. கருணானந்தம் கோகிலம்(இலங்கை), நாகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/79007969/notice/111373)

Posted Under