மரண அறிவித்தல் – திரு பாலசிங்கம் செல்லப்பா

திரு பாலசிங்கம் செல்லப்பா
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் ஆயுட்கால உறுப்பினருமான நிரஞ்சனின் அன்புத் தந்தை

அன்னை மடியில் (07 SEP 1936) இறைவன் அடியில் (29 JAN 2021)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் செல்லப்பா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(பரமேஸ்வரா கல்லூரி ஆசிரியர்) வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானலோசனி(லோஜா) அவர்களின் அன்புக் கணவரும்,

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் ஆயுட்கால உறுப்பினருமான நிரஞ்சன்(Toronto), பாலன்(நியூ ஜேர்ஸி), தனுஷா(சிக்காகோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான  நடராஜா, கனகராஜா, கனகசுந்தரம், கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரும்,

தனுஜா (Toronto), துஷி(நியூ ஜேர்ஸி), ஜெயசுந்தர்(சிக்காகோ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டெரின், டினுஷ்கா, டிவிட்டா, டிமித்ரா(Toronto), ஷனன், பிரண்டன், டில்ஷான்(நியூ ஜேர்ஸி), வர்ஷா, சகானா(சிக்காகோ) ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

கோவிட் சட்டங்கள் காரணமாக அன்னாரின் குடும்பத்தின் அழைப்பிலேயே பார்வை, கிரியை மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள முடியும். குடும்பத்தாரின் இந்த வேண்டுகோளை எடுத்து கொள்ளவும்.   

பார்வை

When: Monday, 01 Feb 2021 7:00 PM – 9:00 PM
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

When: Tuesday, 02 Feb 2021 5:00 PM – 7:00 PM
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

When: Tuesday, 02 Feb 2021 7:30 PM
Location: Highland Hills Crematorium
Address: 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/58246431/notice/115039)

Posted Under