மரண அறிவித்தல் – திரு அசோகன் இராசையா

திரு அசோகன் இராசையா
பழையமாணவர் யாழ் இந்துக் கல்லூரி (1977 Batch)
தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) பழையமாணவர் யாழ் இந்துக் கல்லூரி அவர்களின் சகோதரர்
ஊரெழு (பிறந்த இடம்), கனடா

அன்னை மடியில் (06 FEB 1959) இறைவன் அடியில் (09 JAN 2021)

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், யாழ் இந்துக் கல்லூரி பழையமாணவருமான அசோகன் இராசையா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம்(Master) பர்வதபத்தினி இராசையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாதுசிகாமணிபிள்ளை குணலஷ்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி அசோகன் அவர்களின் பாசமிகு கணவரும்,

வருணன், லிலானி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

ஷாமினி வருணன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

இளங்கோ(கனடா), நம்பி(கனடா), காலஞ்சென்ற பார்த்தீபன்(தியாகி திலீபன், யாழ் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரி நம்பி(கனடா), பத்மினி(இலங்கை), காலஞ்சென்ற மதிவதணன், சாரோஐனி(இலங்கை), சூரியகுமார்(கனடா), கலாஐனி(இலங்கை), சந்திரகுமார்(கனடா), காலஞ்சென்ற டியூக்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரியன், ஆலியா ஆகியோரின் பாசமுள்ள தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர்

Mobile :  +14168438762

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/50659003/notice/114554)

Posted Under