மனங்கனிந்து நன்றி | Event Photos

Album 1 by Selfie Moment of Event (click here)

Album 2 by Tamil Vanakam (click here)

Album 3 by Smiles Events (click here)


 

வணக்கம்,

 

கலையரசி 2017 உங்கள் எல்லாருடைய ஆதரவுடனும் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கின்றது.  நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடியே மாலை 5:31க்கு ஆரம்பித்ததும் மாலை 6:00 மணிக்கே மண்டபம் நிறைந்து மண்டபத்துள் பிரவேசிக்கமுடியாமல் பார்வையாளர்கள் வெளியில் குழுமி இருந்ததும் மிகவும் உற்சாகமான அம்சங்கள்.  இந்த வெற்றியை ஊர் கூடி இழுத்த தேர் என்றே சொல்லவேண்டும்.  கரம் தந்து வடமிழுத்த அனைவருக்கும் மனங்கனிந்து நன்றி சொல்லும் தருணம் இது.  

 

முதற்கண், இவ்வாண்டுக்குரிய கலையரசி விழாக்குழுவினராக எம்மீது நம்பிக்கை வைத்து, எமக்கான பூரணமான ஆதரவினைத் தந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் நிர்வாகக் குழுவினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

 

அடுத்து இவ்வாண்டுக்குரிய பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நல்லதோர் கருத்துரைப்பையும் வழங்கிய மதிப்புக்குரிய ஆசான் திரு பிரான்சிஸ் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

 

இவ்விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சியை வழங்கியும், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும் விழாவைத் சிறப்புறச் செய்த கலைஞர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

 

இவ்வாண்டு விழா அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு விதமாக விழாவைப் பற்றிய அறிவிப்புகளையும் செய்திகளையும் வெளியிட்ட ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களூடாக பரப்புரை செய்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.   

 

அடுத்து சுவையான உணவினை எமக்கு சிறப்பானமுறையில் வழங்குவதற்கு உதவிய Babu கேட்டரிங்உரிமையாளர்களுக்கும் எமது நன்றிகள்.

 

கலையரசி விழா மலரை சிறப்பாக வடிவமைத்துதந்த மொனரா Graphic உரிமையாளர் முகமட் ரமீஷ்அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இந்த மலருக்காக ஆக்கங்களை வழங்கியவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

 

இந்த விழா இவ்வளவு சிறப்பாக ஈடேற முதுகெலும்பாக இருந்தவர்கள் விளம்பர அனுசரனையாளர்களும், புரவலர்களும் என்று சொன்னால் மிகையாகாது.  அந்த வகையில் கலையரசிக்கென்றும், யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கென்றும் விளம்பரங்களை வழங்கியும் நிதிக்கொடை அளித்தும் ஆதரவு தந்தவர்களுக்கும் நன்றிகள்.  

 

விழா நிறைவடைந்த உற்சாகமான பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறுவது மகிழ்ச்சி தருகின்றது.  உங்கள் பாராட்டுகளும் ஆரோக்கியமான விமர்சனங்களும் எம்மை மென்மேலும் ஊக்குவிக்கும்.  இவ்வாண்டு கலையரசி விழாவினை மிகவும் நிதானமாகவும் உறுதியாகவும் சிந்தித்துத் திட்டமிட்டு முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களை மாத்திரம் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தோம்.  இது, எமக்கான அடையாளங்களை நோக்கிய பயணத்தின் ஒரு தொடக்கமே. இந்தப் பயணம் இன்னும் சிறப்புற தொடர்ந்தும் நடக்க நீங்களும் நாங்களுமாய் கைகோர்த்து நடப்போம்.

 

நன்றிகளுடன்

 

என்றும் அன்புடன்

தலைவர் கலையரசி விழாக்குழு 2017

யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா

Leave a Reply